தமிழகத்தில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகள்..!
தமிழகத்தில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வுகள் சிலவற்றைத் தற்போது காண்போம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழாவின் 10-வது நாளான நேற்று சுவாமி , அம்பாள் தனித்தனியே பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் நெல்லையப்பர்-காந்திமதி கோயிலில் அப்பர் தெப்பத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மன் சன்னதி அருகேயுள்ள பொற்றாமரை குளத்தில் தெப்பத்தில் அப்பர் பவனி வந்தார்.பின்னர் தெப்பத் திருவிழா மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெற்ற மகா ஆரத்தி நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்காக கங்கை கரையில் பயன்படுத்தப்படும் பன்முகங்களுடன் தீப தூப ஆராதனைப் பொருட்களைக்கொண்டு மகாமகக் குளத்தில் இந்த விழா நடைபெற்றது.
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நடைபெற்றது. திருநங்கைகளுக்கு சொந்தமான இந்த கோவிலில் 40க்கும் மேற்பட்ட மேளதாளங்களுடன் அங்காளம்மன் ஊர்வலமாக கொண்டு சென்றனர். விழாவில் அம்மன் வேடம் அணிந்தும், வேல் குத்தியும் தீச்சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து சென்றனர்.
Comments