11 MLA -களுக்கு தீர்ப்பின் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் 11 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
இதையடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும், அந்த விவகாரத்தில் அவரே முடிவெடுப்பார் என நம்புவதாகக் கூறி வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்த நிலையில், நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில், 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments