காலநிலை மாற்றம் இந்தியாவின் ஜிடிபி-யை பாதிக்கும் என ஆய்வில் உறுதி
காலநிலை மாற்றம் மற்றும் உலக வெப்ப மயமாதலால் அடுத்த பத்தாண்டுகளுக்குள், இந்தியாவின் ஜிடிபி அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்து திறந்தவெளியில் பகல் நேரங்களில் அதிக நேரம் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும்.
இதன் காரணமாக உற்பத்தி திறன் குறைந்து ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2.5 முதல் 4.5 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில், 38 கோடி பேர் திறந்த வெளியில் பணியாற்றும் தொழிலில் ஈடுபட்டு, நாட்டின் 30 சதவித உள்நாட்டு உற்பத்திக்கு வழிவகை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments