அமெரிக்காவை கிண்டலடித்ததால் உயிருக்கு ஆபத்து என அச்சம்.!

0 1344

பாகிஸ்தான் பாஹாவால்புர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டான்.

அமெரிக்காவுக்கும் தாலிபனுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசிய மசூத் அசார், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டதாக கூறினான்.

இதனால் அவனை குறிவைத்து அமெரிக்காவால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதையடுத்து தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக மசூத் அசாரின் சிறையை பாகிஸ்தான் ராணுவத்தினர் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் பாரீசில் நடைபெற்ற சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் மசூத் அசாரை கண்டுபிடிக்க முடியவில்லை என பாகிஸ்தான்அரசு கூறியிருந்தது. தாலிபனை பாராட்டி மசூத் அசார் வெளியிட்ட அறிக்கையால் இம்ரான் கான் அரசுக்கு புதிய தலைவலி உருவாகியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments