கேரளாவில் 5 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி
நாட்டிலேயே முதல் கொரானா நோயாளியை அடையாளம் காட்டிய கேரளாவில் இப்போது மேலும் 5 பேருக்கு அதன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரில் 3 பேர் கடந்த 29 ஆம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.
உறவினர்களான எஞ்சிய 2 பேருக்கு இவர்களிடம் இருந்து தொற்று பரவியுள்ளது என என கேரள மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா திருவனந்தபுரத்தில் தெரிவித்தார்.
இதனிடையே சீனாவுடன் எல்லைத் தொடர்புள்ள அருணாச்சலப் பிரதேச இடங்களுக்குச் செல்ல வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதி பயண உரிமங்களை உடனடியாக ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரானா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய அவசர சிகிச்சைப் பிரிவின் ஒரு பகுதியை கொரானா சிறப்பு சிகிச்சைக்காக ஒதுக்கும் படி அதன் நிர்வாகத்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Comments