கேரளா பத்தனம்திட்டாவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு

0 1402

கேரள மாநிலம் பத்தனம்திட்டா-வில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து திரும்பிவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் அவர்களுடன் தொடர்பு கொண்ட இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து குழந்தைகளுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு அம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்குத் திரும்பிவருகிறவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அரசுக்குத் தெரிவிக்குமாறு கேரள அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments