பாதிப்பு இல்லாத இந்தியர்கள் விரைவில் அழைத்து வரப்படுவர் -மத்திய அரசு

0 3403

ஈரானின் கூம் (Qom) பகுதியில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள ஈரான் அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டிருப்பதாகவும் தொடர் முயற்சிகளின் காரணமாக இந்தியர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

பாதிப்பு இல்லாத இந்தியர்களை இந்தியா அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தையும் இந்திய தூதரகம் மூலம் ஈரான் அரசுடன் நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரானில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்ததை அடுத்து,  பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது.

Our Emb @India_in_Iran continues to maintain close contact w Indian fishermen in #Iran.No case of #COVID19 reportd among them. Ensuring tht they hv adequate supplies. Will continue to monitor their welfare.@vijayanpinarayi @vijayrupanibjp @CMOTamilNadu @ShashiTharoor @mkstalin

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) March 8, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments