"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இணைய தள விற்பனை நிறுவனங்கள் மீது நெட்டிசன்கள் பாய்ச்சல்
கொரானா அச்சத்தை வைத்து மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் சில ஆன்லைன் வியாபாரிகள் இறங்கியுள்ளனர்.
கொரானா தொற்றை தடுக்க கைகளில் சானிட்டைசர்கள் மூலம் கழுவலாம் என்ற தகவல் வெளியான நிலையில் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் 30 மில்லி சானிட்டைசரின் விலை 16 மடங்கு அதிகரித்து 999 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் ஹிமாலாயா நிறுவனத்தின் சானிட்டைசருக்கு சூப்பர்ரீடெய்ல்ஸ் ( Superretails ) என்ற நிறுவனம் இந்த விலையை வைத்துள்ளது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் கொந்தளித்துள்ளனர். இந்த அநியாய விலைக்கு நாங்கள் காரணமில்லை என்றும் இணையத்தில் விற்பவர்களின் கைங்கரியம் என்றும் ஹிமாலயா கூறியுள்ளது. தேவையெனில் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Comments