கரன்சி நோட்டுகள் மூலமாகவும் வைரஸ் பரவும்: ஆய்வு தகவல்
கரன்சி நோட்டுகள் மூலமாகவும் வைரஸ் பரவும் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்டானா (Buldana, Maharashtra) பகுதியில் சேகரிக்கப்பட்ட கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்ததில், எஸ்கெரிச்சியா கோலி, சால்மோனெல்லா டைபி மற்றும் மேலும் 2 நோய் கிருமிகள் (Escherichia Coli, Salmonella Typhi and two other pathogens) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்னொரு ஆய்வில் 96 வகையான கரன்சிகள், 48 நாணயங்களில் பேக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவில் 2014ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 3,000 வகை பேக்டீரியாக்கள், கரன்சிகளில் இருந்தது உறுதியானது. இதை கவனத்தில் கொண்ட அமெரிக்க அரசு, கொரானா பரவாமல் தடுக்க ஆசிய நாடுகளில் இருந்து வந்த டாலர்களை புழக்கத்தில் விடவில்லை. உலக சுகாதார அமைப்பும், முடிந்த வரை பரிமாற்ற வகையில் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கும்படி வலியுறுத்தியுள்ளது.
Comments