பிரான்சிலிருந்து திரும்பிய கர்நாடக இன்ஜினியருக்கு கொரானா அறிகுறி
பிரான்ஸ் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கர்நாடக இன்ஜினியர் ஒருவருக்கு கொரானா அறிகுறி தென்பட்டதையடுத்து மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரான்சில் பணியாற்றிவந்த கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரைச் சேர்ந்த 28 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், கடந்த 5ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருப்பதி எஸ்.வி.ஆர். அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே கொரானா இருக்கிறதா இல்லையா என முடிவு செய்யப்படும்.
Comments