வரலாற்றில் மிகக் கொடிய விமானத் தாக்குதல் இதுதான்..!
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ மீது அமெரிக்க விமானப் படை நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் வரலாற்றிலேயே மிகக் கொடுமையானது. பெர்ல் ஹார்பர் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியதற்குப் பழிவாங்கத் திட்டமிட்டது அமெரிக்கா.
1945ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பசிபிக் தீவுகளில் இருந்து பி 29 எனப்படும் குண்டுவீச்சு விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பியது. அந்த விமானங்கள் டோக்கியோ நகரின் மீது குண்டுமாரி பொழிந்தன.
இந்தத் தாக்குதலில் மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு டன் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 6 பவுண்டு எடைகொண்ட 5 லட்சம் குண்டுகள் வீசப்பட்டதில், அந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் 38 துண்டுகளாகச் சிதறித் தரையில் விழுந்து தீப்பிழம்புகளை உருவாக்கியுள்ளன. இதனால் மரப்பலகைகளால் கட்டப்பட்டிருந்த வீடுகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.
நகர் முழுவதும் தீப்பிழம்பும் புகை மூட்டமும் சூழ்ந்துள்ளது. உலக வரலாற்றில் மிகக் கொடிய இந்தத் தாக்குதலில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும், பத்து லட்சம் பேர் காயமடைந்ததாகவும், பத்து லட்சம் பேர் வீடிழந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Comments