அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதியை அதிகரிக்க உதவும்-பியூஸ் கோயல்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வது, இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வது குறித்த பேச்சுவார்த்தை தொடர்வதாகவும், அதில் அரசு அவசரம் காட்ட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். வர்த்தக விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை சிக்கல் நிறைந்தது என்று கூறிய பியூஸ் கோயல், ஆசியான் நாடுகளுடனும், ஜப்பான், தென்கொரியா நாடுகளுடனும் கடந்த 2009, 2011ம் ஆண்டுகளில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டபோது நேரிட்ட தவறுகள் மீண்டும் நடைபெறுவதை அரசு விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
Comments