டைல்ஸ் தரை உடைந்து விழுந்த விபத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பிய அமைச்சர்
மதுரை செல்லூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் டைல்ஸ் தரை உடைந்து 5 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்ட நிலையில், அங்கு ஆய்வு பணி மேற்கொண்டிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ நூலிழையில் விபத்தில் சிக்காமல் தப்பினார்.
மதுரையின் நுழைவாயிலாக உள்ள முக்கிய இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் செல்லூரில் ரவுண்டானாவுடன் கூடிய கபடி வீரர்களின் சிலை அமைக்கும் பணி நடந்துவரும் நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். அப்போது, டைல்ஸ் தரை திடீரென உடைந்து 5 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது. இதில் பின்னால் வந்துகொண்டிருந்த தொண்டர்கள் பலரும் தவறி விழுந்த நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நல்வாய்ப்பாக தப்பினார்.
Comments