'உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பெண்கள்’ - தெற்கு ரயில்வே செய்த கவுரவம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பெண்களை இயக்க வைத்து தெற்கு ரயில்வே சிறப்பித்துள்ளது.
சேலம் கோட்டம் சார்பில் நடந்த மகளிர் தினகொண்டாட்டத்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்படும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் நண்பகல் 12.40க்கு பெங்களூரு சென்றடைகிறது. வழக்கம்போல் சென்ற இந்த ரயிலை கோவையில் இருந்து சேலம் வரையிலும் பெண்களே இயக்கிச் சென்றனர். இதில், ஓட்டுநர், நடத்துனர், டிக்கெட் பரிசோதகர், கார்டு என அனைத்து பணிகளிலும் பெண்களே பணியில் அமர்த்தப்பட்டனர்.
கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்ட உதய் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 8 மணிக்கு சேலம் வந்தடைந்தது. இதனை ஓட்டி வந்த நிம்மி, சிந்து உள்ளிட்ட பெண்களை பாராட்டிய சேலம் கோட்ட மேலாளர், நினைவு பரிசுகளையும் வழங்கினார்.
Comments