கொரானா எதிரொலி - இத்தாலியில் திருமண விழாக்களுக்கு கட்டுப்பாடு

0 919

இத்தாலியில் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக திருமணங்கள் கூட பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருப்பதும் விழாவிற்கு வருபவர்களை கட்டிஅணைத்து முத்தம் கொடுத்து வரவேற்பதை தவிர்ப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாற்காலிகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் மட்டுமே அமர வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது.

இத்தாலி மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து திரளான காதல் ஜோடியினர், அந்நாட்டிற்கு திருமணம் செய்வதற்காக வருகை தருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற திருமணங்களில் கலந்து கொள்வதற்காக 4 லட்சத்து 36ஆயிரம் பேர் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments