சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

0 1081

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்த சற்குணம் என்பவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் காரில் பூந்தமல்லிக்கு இன்று காலை சென்று கொண்டிருந்தார்.

மதுராந்தகம் அருகே திருச்சி -சென்னை நெடுஞ்சாலையில் கார் வந்தபோது திடீரென புகை வந்துள்ளது. இதை கண்ட 4 பேரும் காரிலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் காரில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலின்பேரில் செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் வந்து தீயை போராடி அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. காரில் தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து படாளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments