கொரானா தொற்றால் புளோரிடாவில் 2 முதியவர்கள் உயிரிழப்பு

0 758

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு சென்று புளோரிடா திரும்பிய 5 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கடல்தாண்டி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க 2 முதியவர்கள், கொரானா தொற்றால் உயிரிழந்ததாக புளோரிடா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர், சாண்டா ரோசா கவுண்டியையும் மற்றொருவர் ஃபோர்ட் மியர்ஸை  சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments