கொல்கத்தாவில் இலவச கராத்தே பயிற்சியளிக்கும் வீராங்கனை
கொல்கத்தாவில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைப் பெண்கள் தற்காப்புக்கு இலவசமாக கராத்தே பயிற்சியளித்து வருகிறார் கராத்தே வீராங்கனையான ஆயிஷா நூர், அவரிடம் ஏராளமான ஏழைப் பெண்கள் தற்காப்புக் கலையைப் பயின்று வருகின்றனர்.
இதேபோன்று, ஹைதராபாத்தை சேர்ந்த சையதா பாலக் தமது 25 வது வயதில் 22 சர்வதேச கராத்தே போட்டிகளிலும் 20 தேசிய கராத்தே போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். 13 வயதில் கராத்தே கற்க ஆரம்பித்த தாம் பயிற்சிபெற்ற 6 மாதத்திற்குள் சர்வதேச பதக்கத்தை வென்றதாக கூறுகிறார். ஆசிய மற்றும் உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும் தாம் தகுதி பெற்றுள்ளதாக கூறுகிறார் சையதா பாலக்.
Comments