துருக்கி வழியாக கீரீஸ் செல்ல முயலும் அகதிகளை அரை நிர்வாணமாக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுவதாக புகார்
துருக்கி வழியாக க்ரீஸ் செல்ல முயலும் ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகள், அரை நிர்வாணமாக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பலியாகினர். இதன் விளைவாக, சிரிய அகதிகள் ஐரோப்பாவை அடைவதை இனி துருக்கி தடுக்காது என அந்நாடு அறிவித்தது. இதையடுத்து துருக்கியிலிருந்து கிரீஸ் வழியாக தரை மற்றும் கடல் மார்க்கமாக ஏராளமான அகதிகள் வெளியேற முயன்று வருகின்றனர்.
அவர்களை கண்ணீர் புகை குண்டுகள், தடுப்பு அரண்கள் போன்றவை மூலம் கிரீஸ் பாதுகாப்பு படையினர் தடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது அகதிகள் அடித்து அரை நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பறித்துக்கொள்ளப்பட்டு மீண்டும் துருக்கி எல்லைக்குள் விரட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Comments