MP, MLA தேர்தல்களில் வேட்பாளர்களின் குற்ற வழக்குகளை வெளியிட வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையம்

0 950

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் குற்றவழக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில்,வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட குற்ற வழக்கு விவரங்களையும், அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தையும், குற்றவழக்கு இல்லாத மற்றவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? ஆகிய விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை நிறைவேற்ற தவறினால் அந்த கட்சி உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments