கொரானா பாதிப்பு அச்சத்திலிருந்து மீண்ட கேரளாவில் வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
கோழிக்கோடு மாவட்டம் கொடியத்தூர் மற்றும் வேங்கிரி பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள் எச்.பி.ஏ.ஐ. வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் வந்தது.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கொடியத்தூர், வேங்கிரி பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பகுதியில் பண்ணைகளில் உள்ள கோழிகளும் மற்ற வளர்ப்பு பறவைகளும் உடனடியாக கொன்று புதைக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments