"கடந்த 5 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட திட்டங்களுக்கு ஒப்புதல்" - அமைச்சர் ராஜ்நாத் சிங்
எதிர்காலத்தில் ராணுவ தளவாடங்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னனி நிறுவனங்களாக விளங்குவதற்கான வாய்ப்பு, இந்திய தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழா, டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் டேங்குகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் வாய்ப்புகள் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதக பேசினார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ராணுவ தளவாடங்களுக்காக ரூபாய் 4 லட்சம் கோடி மதிப்புள்ள, 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Comments