கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி நீங்கள் அறியாத 5 விஷயங்கள்

0 17462

இன்று நாம் பயன்படுத்தும் பல அதி நவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் மிகவும் எளிதானதாக மாற்றி உள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பவை மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றில் இருக்ககூடிய நவீன வசதிகள்.

குறிப்பாக நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியன, காலத்திற்கு தகுந்தார் போல் நாம் குரல் எழுப்பினாலே இயங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளன.

அந்த வகையில் நாம் ஸ்மார்ட் போனில் உபயோகிக்கூடிய கூகுள் அசிஸ்டெண்ட் போனில் ஏதாவது தேட வேண்டும் என்றாலோ அல்லது ஒருவருக்கு கால் செய்து பேச வேண்டும் என்றாலோ நம்முடைய ஸ்மார்ட் போனில் ஒகே கூகுள் என்று சொல்லி ஆரம்பித்து சமிங்ஞை அனுப்பினால் போதும் அடுத்த சில நொடிகளில் அது நாம் சொன்ன கட்டளையை ஏற்று அதை செயல்படுத்தும்.

இப்படி உதவிகரமாக இருக்கும் கூகுள் அசிஸ்டெண்ட்டில் உள்ள பலருக்கும் தெரியாத 5 சுவாரஸ்யமான அம்சங்களை பார்க்கலாம்.

முதலாவது அம்சம்

நீங்கள் ஒரு இடத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய விரும்பினால், அதற்கான வழியை கூகுளிடம் கேட்டால் போதும், நீங்கள் செல்லக்கூடிய நேரத்தில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மற்றும் நீங்கள் அந்த இடத்தை சென்றடைய ஆகும் நேரம், மேலும் அந்த இடத்தை எவ்வாறு அடையலாம் என்பது வரை உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அது அளிக்கும்.

image

உதாரணமாக நீங்கள் டெல்லிக்கு செல்ல விரும்பினால், ”கூகுள்” டெல்லிக்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டால், அது பற்றிய முழு தகவல்களையும் அளிக்கும்.

இரண்டாவது அம்சம்

நாம் பொதுவாக ஏதாவது வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்றால் அங்கு பேசப்படும் மொழி தெரியாமல், அனுபவிக்கும் சிக்கல்கள் ஏராளம், அதேபோல வேறு மொழியில் இருக்கும் வார்த்தையை அரிய, டிக்‌ஷனரியில் இருக்கும் பக்கங்களை புரட்டுவதற்குள் அந்த வார்த்தையே மறந்து போய்விடும்

image

இந்த இன்னல்களை போக்க கூகுள் அசிஸ்டெண்ட்டிடம் வணக்கம் என்பது பிரெஞ்சு மொழியில் என்ன என்று கேட்டால் போதும் அதற்கான பதிலையும், அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது வரை நமக்கு சொல்லும் இந்த கூகுள் நண்பன்.

மூன்றாவது அம்சம்

வேலைக்கு சென்று அங்குள்ள எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து, அதற்கு நடுவில் மனைவி, பிள்ளைகள் கூறும் பொருட்களையும் வாங்கி வீட்டிற்கு செல்லும் ஒரு சராசரி ஆண், ஒருவேளை அந்த பொருளை மறந்து வீட்டிற்கு சென்றால் அதை விட அதிக பிரச்சனைகள் அங்கு காத்திருக்கும்.

image

இப்படி மறதி காரணமாக பல சிக்கல்களை சந்திக்கும் எல்லா நபர்களுக்கும் உதவும் வகையில் நாம் வாங்க வேண்டிய பொருட்களை அல்லது செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு நினைவூட்ட கூகுள் அசிஸ்டெண்டிடம் கூறினால் அது சரியாக அதே நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டும்

மேலும் நாம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் GOOGLE HOME அல்லது GOOGLE KEEP ஆகியவற்றில் பதிவாகி நமக்கு அது நியாபகப்படுத்தும்.

நான்காவது அம்சம்

மிகவும் சிக்கலான மற்றும், நீண்ட கணக்குகள் நமக்கு எப்போதும் ஒரு சிறிய சலிப்பை உண்டாக்கும், அந்த கணக்குகளை சரிபார்க்க நாம் ஒரு பேப்பர் எடுத்து அதில் கணக்குகளை போட்டு சரிபார்ப்போம் அல்லது கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்ப்போம் இனி எந்த சலிப்பும் இல்லாமல் கூகுள் அசிஸ்டெண்டிடம் உதவி கேட்கலாம்.

image

உதாரணமாக 20 ஆயிரம் மைல்களுக்கு எத்தனை கிலோ மீட்டர் என கேட்டால் அதற்கான சரியான பதில் நமக்கு கூகுளிடம் இருந்து கிடைக்கும், அல்லது 1000 டாலர்களின் இந்திய மதிப்பு கேட்டால் அதன் மதிப்பை ஸ்பீக்கர் வாயிலாக நமக்கு சரியான பதிலை அளிக்கும்.

ஐந்தாவது அம்சம்

நீங்கள் செய்திகள் அதிகமாக வாசிக்கும் அல்லது உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவராக இருந்தால் அதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் ஒரு சிறந்த நண்பனாக இருக்கும், உங்களுக்கு தேவையான செய்திகளை, அல்லது நிகழ்வுகளை கூகுளிடம் சொன்னால் உடனடியாக உலகத்தின் எல்லா மூலைகளில் இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உங்களுக்கு அளிக்கும்.

image

மேலும் உலகில் ஏற்படும் எல்லா முக்கிய நிகழ்வுகளையும் நாம் கேட்காமலேயே நமக்கு அளிக்கும்.

இப்படி ஊதியமே வாங்காமல் நம்முடைய பல பிரச்சனைகளுக்கு உதவும் இந்த கூகுள் அசிஸ்டெண்ட். உண்மையிலேயே சிறந்த ”அசிஸ்டெண்ட்” தான்.

 

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments