முகம்,அகம் காட்டும் கண்ணாடியின் வரலாறு..!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கிய பங்கு வகித்து வருவது முகம் பார்க்கும் கண்ணாடி. எங்கு சென்றாலும் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறோம். மனிதர்களை அழங்கரிக்கும் அப்படிபட்ட கண்ணாடியின் வரலாற்றை சற்று புரட்டுவோம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி செய்வதற்கான மூல பொருட்களை கண்டறிந்த மனிதர்கள் அதற்கான மகத்துவத்தை பல ஆண்டுகளுக்கு பின்னரே அறிந்தனர்.
முதன்முதலில் கண்ணாடியை வடிவமைத்து அதில் தன் முகத்தை பார்த்து மக்களே பயந்துள்ளனர் என்று வரலாற்று கூறுகள் இருக்கின்றன. இந்நிலையில் கண்ணாடியானது இன்றைய காலகட்டத்தில்மனிதர்களின் கலாச்சாரத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது.
கண்ணாடியின் பிரதிபலிப்பானது கி.மு 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டது. கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலிக்கா ( குவாட்ஸ் மணல் ) கலவையினால் செய்யபட்ட சிறு அச்சுகளை உருக்கி கண்ணாடி குவளைகள் செய்ய தொடங்கிய பின் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பபிலோனியாவில் நீண்ட குழாய்களை உருக்கி கண்ணாடி குழம்பினுள் கண்ணாடி பாத்திரங்கள் செய்வதை கண்டுபிடித்தனர்.எகிப்தில் ஆரம்பித்து ரோம், இத்தாலி, சைனா என பல்வேறு நாடுகளில் கண்ணாடி பொருட்கள் செய்யும் தொழில்நுட்பம் விரிவடைந்துள்ளது.
17 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் கண்ணாடி குழம்பை சிறிய தகடுகளாக இளகவைத்து அதனை வட்டமாக ஊதுவார்கள் பின் அந்த குமிழானது வட்டமாக வடிவம் பெற்ற கண்ணாடியாக உருவம் பெரும். காலபோக்கில் அதனை சதுரமாக வெட்டி முகத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்தனர்.
பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் மக்களிடையே கண்ணாடியின் பிரதிபலிப்பு அதிகரிக்க செய்தது. ஒவ்வொருவர் வீட்டிலும், கையிலும், கண்ணாடி கட்டங்களும் என எங்கு சென்றாலும் கண்ணாடியின் பிரதிபலிப்பு தான்.
கண்ணாடிக்கு என்ன பெரிய வரலாறு இருந்தாலும் கண்ணாடியை வீட்டில் உடைத்தால் கெட்ட சகுணம், உடைந்த கண்ணாடியை தாண்ட கூடாது, இரவு நேரத்தில் கண்ணாடி பார்க்க கூடாது, உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. என பல மூட நம்பிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கண்ணாடியானது மனிதர்களிடத்தில் நல்லவன், கெட்டவன் என்று பாராது அனைவருக்கும் தனது பிரதிபலிப்பை அழகாக காட்டுகிறது.
Comments