கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த BSNL, JIO மூலம் விழிப்புணர்வு
கொரானா வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிஎஸ்என்எல், ஜியோ செல்பேசி நிறுவனங்கள் மூலம் புதிய விழிப்புணர்வு முயற்சியை தொடங்கியுள்ளது.
அந்த நிறுவனங்களின் செல்பேசி எண்களை அழைக்கும்போது, அதில் ஆங்கிலம், ஹிந்தியில் பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் விழிப்புணர்வு செய்தி ஒலிக்கப்படுகிறது. இருமலுடன் தொடங்கும் அந்த குரல் பதிவில், இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை கர்ச்சீப் கொண்டு மறைக்க வேண்டும் என்றும், கைகளை தொடர்ந்து சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு மீட்டர் இடைவெளியில் இருமல், காய்ச்சல் அல்லது சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டோர் இருக்கும்பட்சத்தில், உங்களது முகத்தையோ, கண்களையோ, மூக்கையோ தொடக்கூடாது என்றும், தேவைப்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்தை உடனடியாக அணுக வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments