டெல்லி வன்முறை தொடர்பாக 2 தொலைக்காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

0 1166

ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 2 நாள் தடையைச் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் நீக்கியுள்ளது.

டெல்லி வன்முறையின்போது, சமூக நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம் என அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த அறிவுறுத்தலை மீறியதாகக் கூறி ஏசியா நெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய மலையாளச் செய்தித் தொலைக்காட்சிகள் வெள்ளி மாலை ஏழரை மணி முதல் ஞாயிறு மாலை ஏழரை மணி வரை 2 நாட்களுக்கு ஒளிபரப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு அந்த ஊடகங்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று ஏசியாநெட் நியூஸ் மீதான தடை இரவு ஒன்றரை மணி அளவிலும், மீடியா ஒன் மீதான தடை இன்று காலை ஒன்பதரை மணி அளவிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments