நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் பெண்களுக்கு வலை வீசி மீன் பிடித்த நபர்

0 4501

நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி, பெண்களிடம் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி பல பெண்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்து, தவறான நோக்கத்துக்கு அழைத்த விபரம், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் ஏற்பாடு செய்த பெண் ஒருவர், அந்த மர்ம நபரிடம் பேஸ்புக்கில் பேச்சுக்கொடுத்து ஐதராபாத்துக்கு வரவழைத்தார். அப்போது அங்கு மறைந்து நின்று நோட்டமிட்ட போலீசார் மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பு ஆட்கள் அந்நபரை சுற்றிவளைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments