பாரத் பெட்ரோலியம் பங்கு விற்பனைக்கு விளம்பரம் வெளியிட்டது அரசு

0 1163

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 விழுக்காடு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்று நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கான ஆலோசகராக Deloitte Touche Tohmatsu India LLP என்கிற நிறுவனத்தையும் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் மேலாண்மைக்கான துறை நியமித்துள்ளது. இந்தப் பங்குகளை வாங்க விரும்புவோர் மே 2ஆம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்கலாம் என இன்று வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது.

https://dipam.gov.in/sites/default/files/Project%20Fuel%20PIM_vf.pdf?download=1))

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments