ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்

0 1530

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கடந்த 5 திரைபடங்களில் நடித்த டேனியல் கிரெய்க், அடுத்த பாகத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டின் "கேசினோ ராயல்" படத்தில் மூலம் ஜேம்ஸ் பாண்டாக அறிமுகமான கிரேக், மீண்டும் ஜேம்ஸ் பாண்ட்டாக நடிப்பதை விட தனது மணிக்கட்டை வெட்டிக்கொள்ள விரும்புவதாக பேட்டி ஒன்றில் கூறினார்.

இந்த நிலையில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள "நோ டைம் டு டை" திரைப்படமே டேனியல் கிரெய்க் ரகசிய ஏஜெண்ட் 007 ஆக நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர், மனம் மாறி அடுத்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments