Yes வங்கி திறன் சரியில்லாததால் முன்பே திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு
yes வங்கியின் போக்கு சரியில்லாததால் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் வைத்திருந்த 1300 கோடி ரூபாய் பணத்தை முழுவதுமாக எடுத்தது திருப்பதி தேவஸ்தானம்.
யெஸ் வங்கியில் திருப்பதி தேவஸ்தானம் சில ஆண்டுகளாக கணக்கு வைத்திருந்தது. வங்கி கணக்கில் 1300 கோடி பணம் இருப்பில் இருந்துள்ளது. ஆனால் சில மாதங்களுக்கு முன் யெஸ் வங்கியின் திறன் போக்கு சரியில்லை என்பதை அறிந்து, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் தகவல் அளிக்கப்பட்டு, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, மொத்த பணத்தையும் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ள யெஸ் வங்கியில் தற்போதைய சூழலில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மாதம் 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் பணம் முழுவதும் தப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments