பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக் சுற்றுலா விடுதி இடிப்பு

0 1156

மத்தியப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் பதக்கின் சுற்றுலா விடுதியை ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றியுள்ளனர்.

விஜயராகவ்கர் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சஞ்சய் பதக், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயல்வதாகத் திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாகக் கூறி சஞ்சய் பதக்கின் நிறுவனம் நடத்தி வந்த 2 இருப்புத் தாதுச் சுரங்கங்களை மத்தியப் பிரதேச அரசு மூடியுள்ளது.

இதேபோல் பாந்தவ்கர் என்னுமிடத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதாகக் கூறி சஞ்சய் பதக்கின் சுற்றுலா விடுதியையும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றியுள்ளனர். இது தனக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை என சஞ்சய் பதக் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments