ஆட்சி கவிழ்ப்பு முயற்சி குற்றச்சாட்டு - சவூதி அரேபிய அரச குடும்பத்தினர் 2 பேரிடம் விசாரணை
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்கீழ் சவூதி அரேபியா மன்னரின் இளைய சகோதரர் உள்ளிட்ட அந்நாட்டு அரச குடும்ப மூத்த உறுப்பினர்கள் 2 பேரை பிடித்து (detained) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி அரேபிய மன்னர் சல்மானின் (Salman) இளைய சகோதரரான இளவரசர் அகமது பின் அப்துலாஜிஸ் (Ahmed bin Abdulaziz), மன்னரின் மருமகன் முகமது பின் நயேப் (Mohammed bin Nayef) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. விசாரணைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இருப்பினும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்கீழ் இருவரிடம் வெள்ளிக்கிழமை முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( the Wall Street Journal ) பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Comments