கேரள காவல்துறை பெண் போலிசுக்கு கொடுத்த மகளிர் தின பரிசு ..! - என்ன தெரியுமா?
உலக மகளிர் நாளையொட்டிக் கேரளத்தில் உள்ள அனைத்துக் காவல்நிலையங்களிலும் தலைமைப் பொறுப்பைப் பெண்களிடம் ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
1975 முதல் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாள் உலக மகளிர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் மகளிர் நாளில் பெண்களுக்குத் தலைமைப் பொறுப்பு வழங்கக் கேரளக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்துக் காவல்நிலையங்களிலும் நாளை ஒருநாள் மட்டும் தலைமைப் பொறுப்பைப் பெண்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்குக் காவல்துறைத் தலைமை இயக்குநர் லோகநாத் பெகரா அறிவுறுத்தியுள்ளார்.
Comments