ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய இணையதளங்கள் பாக்., சீனா Hacker-களால் முடக்கம்
சீனா, பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களின் கைவரிசையால் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சி ஈ ஆர் டி எனப்படும் இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எனப்படும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளால் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 747 இணையதளங்கள் பாதுகாப்பு அமைப்புகள் உடைக்கப்பட்டு ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் சீனா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நாடுகளைத் தவிர தவிர, பிரான்ஸ், நெதர்லாந்து, ரஷ்யா, செர்பியா, தைவான் மற்றும் துனிசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர்களும் இந்த இணையத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Comments