அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து போதைப்பொருள் கடத்தல்

0 1474

கர்நாடகாவில் அயன் பட பானியில் வயிற்றுக்குள் வைத்து ஒரு கிலோ 385 கிராம் அளவிலான, கொக்கைன் போதைப் பொருள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2ந் தேதி பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் ஏர் கார்கோ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது,
கௌதமாலா நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தப் பெண் 150 கொக்கைன் காப்ஸ்யூல்களை விழுங்கி, வயிற்றுக்குள் ஒரு சிறிய டியூப் போன்ற அமைப்பிற்குள் அவற்றை மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்புடன், பெண்ணின் வயிற்றில் இருந்த அனைத்து காப்ஸ்யூல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments