கொரோனா வைரஸ் அச்சம்: நாடாளுமன்றத்தை பார்வையிட பார்வையாளர்களுக்கு தடை

0 1124

வருகிற 11 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, மக்களவை செயலர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரு அவைகளையும் சேர்ந்த எம்.பிக்கள் அவர்களுடன் பார்வையாளர்களை அழைத்துவரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பிற பார்வையாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹோலி விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை 11-ம் தேதி நாடாளுமன்றம் தொடங்கும் போது இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments