பாகிஸ்தானில் மீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாகிஸ்தானில் தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்தன. மேலும் வயல்வெளிகளையும் அழித்ததால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாறியதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகியது.
இதனால் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேசிய அளவிலான அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது. இதையடுத்து உணவுப் பொருட்களைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Comments