அடாவடி ஆட்டோ ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர்

0 14146

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் மாநகர பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட அடாவடி ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவுடன் போலீசில் சிக்கினார்.

ரகளையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் ராயப்பேட்டையை சேர்ந்த ராமன் என்பதை சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுபிடித்த போலீசார், அவர் மீது பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, சீறுடை அணியாமல் ஆட்டோ ஓட்டுதல், போக்குவரத்து விதியை மீறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். அவருக்கு ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாததால் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஆட்டோ செல்லும் அளவுக்கு இடப்பக்கம் இடம் இருந்த போதும் பேருந்துக்கு வழிவிட்டு செல்லாமல் அடம் பிடித்ததை பார்த்து விலகிச்செல்ல அறிவுறுத்திய வாகன ஓட்டியை தாக்க முயன்றது, பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்தது தொடர்பாக, சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் தனியாக வழக்கு ஒன்றை பதிந்து ராமனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments