கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - WHO கவலை
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால், அதில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உண்மையில் வைரஸ் அச்சுறுத்தல் குறித்த தீவிரத்தை பல உலக நாடுகள் இன்னமும் அறியவில்லை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
Comments