தண்டவாளத்தை கடக்க முயன்ற BMW கார் மீது ரயில் மோதி விபத்து
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார் மீது மெட்ரோ ரயில் மோதும் திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்நகர காவல்துறையினரால் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ரயில்வே கேட்டின் ஒரு பகுதி மட்டும் தாழ்வாக இருந்ததை கவனிக்காமல் BMW கார் ஒன்று, இடதுபுறமாக திரும்பி தண்டவாளத்தை கடக்க முயல்கிறது.
அப்போது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் கார் மீது மோதி தள்ளியபடி, வேகமாகச் செல்கிறது. கடந்த 3ம் தேதி நடந்த இந்த விபத்தில், கார் அப்பளமாக நொறுங்கிய நிலையில், அதன் ஓட்டுநர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். பதபதைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments