சீனாவில் இருந்து வேலூர் திரும்பிய 12 பேருக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பு

0 10858

சீனாவில் இருந்து வேலூர் திரும்பிய 12 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, கொரோனா நோய் தடுப்பு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், சீனாவில் இருந்து வேலூர் திரும்பிய 12 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய, அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், கொரானா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தனி வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments