நிலம் கையகப்படுத்துதல் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

0 2505

நிலம் கையகப்படுத்துதலில், நில உரிமையாளருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கும் வரை, நில எடுப்பு பணி முடிவுறாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ((Indira Banerjee)), வினீத் சரண் ((Vineet Saran)), எம்.ஆர்.ஷா, ரவீந்திர பட்((Ravindra Bhat)) ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இறுதி விசாரணை மேற்கொண்டு, இன்று தீர்ப்பளித்தது.

அதில், நிலம் கையகப்படுத்துதலின்போது, அதற்கான இழப்பீட்டை, நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வரை, நில எடுப்பு பணிகள் முடிவுற்றதாக கருத முடியாது எனத் தீர்ப்பளித்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதலின்போது, அதன் முழு பலன்களும், நில உரிமையாளர்களுக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும், அது ஒருபோதும் இடைத்தரகர்களுக்கானதாக இருக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

அரசு தரப்பு முறையாக நில எடுப்பை முடிக்காத போதும், உரிய இழப்பீடு செலுத்தாத போது தான், நிலம் கையகப்படுத்துதல் ரத்தாவதாக கருத முடியும் என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments