ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசு இறுதி முடிவு எடுக்கலாம்

0 1072

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்த இறுதி முடிவை மாநில அரசே எடுக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்திருக்கிறார்.

ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், இது தொடர்பாக ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். 

எந்தவொரு இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் ஆய்வுக்காக தொடங்குகின்ற போது மாநில அரசின் கீழ் இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு தாக்க ஆணையத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்த விவகாரத்தில் அவர்களின் முடிவு தான் இறுதியானது என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments