வரும் நிதியாண்டில் வாகன விற்பனை கடும் சவாலாக இருக்கும் - HONDA துணை தலைவர்
வரும் நிதியாண்டில், பிஎஸ்-6 தர வாகனங்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்பதால் அடுத்த நிதியாண்டிலும் வாகன விற்பனை என்பது மோட்டார் வாகன துறைக்கு மிகப் பெரும் சவாலாகவே இருக்கும் என ஹோண்டா மோட்டர்ஸ் அண்டு ஸ்கூட்டர் (HMSI) இந்தியாவின் நிறுவன துணை தலைவர் யாவீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து பிஎஸ்-6 தரக்கட்டுப்பாட்டைக் கொண்ட வாகனங்களின் விற்பனை 100 சதவீதம் கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும், இதனால், ஒவ்வொரு வாகன தயாரிப்பு நிறுவனமும் தங்களது தயாரிப்புகளின் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு, புதிய விதிமுறைகள் காரணமாக பாதுகாப்பு உபகரணங்களுக்கான செலவின உயாவு ஆகியவையும் பிஎஸ்-6 இருசக்கர வாகனங்களின் விலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
Comments