10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான Hall Ticket பதிவிறக்க தேதி அறிவிப்பு

0 1747

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வரும் 11ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி 10ம் வகுப்பு பொதுதேர்வு தொடங்க உள்ளது.

இந்நிலையில் இத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை வரும் 11ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பள்ளிகள் தங்களது User ID மற்றும் PassWord ஆகியவற்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அதற்குரிய அதிகாரிகளை உடனடியாக அணுகுமாறும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments