காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 1064

காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மக்களவை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், டெல்லி கலவரங்கள் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டதால் 7 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் கோயிலாக நாடாளுமன்றம் தொடர்ந்து கருதப்பட்டு வருவதாகவும், இதை நினைவில் கொண்டு பாஜக அரசு செயல்பட்டால் நல்லது என்றும் தெரிவித்துள்ள ஸ்டாலின், சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments