சேலம் மூதாட்டி கொலை வழக்கில் ஒருவர் சரண் - ஒருவர் கைது

0 1375

சேலத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த மூதாட்டி மகனின் கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் எனும் மூதாட்டி கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில், மூதாட்டியை கொலை செய்ததாக அவரது மகன் சிவக்குமார் போலீசில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நல்லமாள், அண்மையில் தனது நிலத்தை விற்று கிடைத்த பணத்தைக் கேட்டு சிவக்குமார் நச்சரிந்து வந்ததும், பணத்திற்கு ஆசைப்பட்டு கள்ளக்காதலியுடன் இணைந்து, மூதாட்டி நல்லம்மாளுக்கு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்தததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்த சிவக்குமாரின் கள்ளக்காதலியான, ஓய்வு பெற்ற தாசில்தாரின் மனைவி ஜெயலட்சுமியை கைது செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments