கொரோனா பாதிப்பு…குடியரசு தலைவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டம் மூடப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல், சமீபத்தில் இந்தியாவிலும் பரவியுள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியான நிலையில் நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் முகல் தோட்டம் மார்ச் 7 ஆம் தேதி முதல் மூடப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
இதே போல பிரதமர் மோடியும் மக்கள் கொரோனா பற்றி பயப்படாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமீபத்தில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Comments