இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியத் தம்பதிகள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரி ஆசிரியத் தம்பதிகள், சீரான லாபமும் மன நிம்மதியும் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி - குமுதவள்ளி தம்பதியர், அரசுப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். மங்கநல்லூரிலுள்ள இவர்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் சீரகச்சம்பா, கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெற்பயிர்களையும், நாட்டு ரக வேர்க்கடலை, பச்சை மிளகாய், அவரைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி வகைகளையும் பயிரிட்டுள்ளனர்.
பசுஞ்சானம், கோமியம், பூண்டு, இஞ்சி, உள்ளிட்டவற்றைக் கொண்டு அங்கேயே இயற்கை இடுபொருட்களை தயார் செய்து பயன்படுத்துகின்றனர். விளை பொருட்களை தங்கள் தேவைக்குப் போக உறவினர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் இலவசமாக கொடுப்பதாகக் கூறும் ஆசிரியத் தம்பதிகளிடம் வெளியூரில் இருந்து வருபவர்கள் குறைந்த விலைக்கும் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
Comments