பங்கு சந்தையில் படு வீழ்ச்சி - முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி இழப்பு
இந்திய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.
இந்திய பங்கு சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை துவக்கின. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிந்து, 37 ஆயிரத்து 372 ஆக வர்த்தகம் ஆனது.
பின்னர் வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சரிவு ஆயிரத்து 31 புள்ளிகளாக இருந்தது. அதே போன்று தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 326 புள்ளிகள் குறைந்து 10 ஆயிரத்து 942 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
கொரானா தொற்றின் தாக்கத்தால் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. உள் நாட்டைப் பொறுத்த வரை, நெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையகப்படுத்தியதுடன், பணம் எடுப்பதற்கு பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதனால் வங்கி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
பங்கு சந்தைகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து டாலருக்கு 74 ரூபாய் என்ற அளவை நோக்கி செல்கிறது
Comments